Red Hat Enterprise Linux 5.4

வெளியீட்டு அறிக்கை

அனைத்து கணினிகளுக்கான வெளியீட்டு அறிக்கை

Red Hat Engineering Content Services

சட்டஅறிக்கை

Copyright © 2009 Red Hat, Inc.. This material may only be distributed subject to the terms and conditions set forth in the Open Publication License, V1.0 or later (the latest version of the OPL is presently available at http://www.opencontent.org/openpub/).
Red Hat and the Red Hat "Shadow Man" logo are registered trademarks of Red Hat, Inc. in the United States and other countries.
All other trademarks referenced herein are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701
PO Box 13588 Research Triangle ParkNC 27709 USA

சுருக்கம்
1வது ஜூலை 2009
இந்த ஆவணம் Red Hat Enterprise Linux 5.4இன் விவரங்களை கொண்டுள்ளது.

1. மெய்நிகராக்க மேம்படுத்தல்கள்
2. கிளஸ்டரிங் மேம்படுத்தல்கள்
2.1. ஃபென்சிங் வளர்ச்சிகள்
3. பிணைய மேம்படுத்தல்கள்
4. கோப்புமுறைமைகள் மேம்படுத்தல்கள்
5. பணிமேடை மேம்படுத்தல்கள்
5.1. கூடுதல் லினக்ஸ் ஒலி வடிவமைப்பு
5.2. வரைகலை டிரைவர்கள்
5.3. லேப்டாப் சேவை
6. கருவி மேம்படுத்தல்கள்
7. வடிவமைப்பு குறிப்பிட்ட சேவை
7.1. i386
7.2. x86_64
7.3. PPC
7.4. s390
8. கர்னல் மேம்படுத்தல்கள்
8.1. பொதுவான கர்னல் வசதி துணை
8.2. பொதுவான இயக்கத்தள சேவை
8.3. இயக்கி மேம்படுத்தல்கள்
9. தொழில்நுட்ப முன்பார்வைகள்
A. வரலாறு மறுபார்வை
இந்த ஆவணம் Red Hat Enterprise Linux 5.4க்கான (kernel-2.6.18-154.EL) குடும்ப தயாரிப்புக்கான இவற்றின் வெளியீட்டு அறிக்கையை கொண்டுள்ளது:
  • Red Hat Enterprise Linux 5 Advanced Platform x86, AMD64/Intel® 64, Itanium Processor Family, System p மற்றும் System z
  • Red Hat Enterprise Linux 5 சேவையகம் x86, AMD64/Intel® 64, Itanium Processor Family, System p மற்றும் System z க்கு
  • Red Hat Enterprise Linux 5 பணிமேடை x86 மற்றும் AMD64/Intel®க்கு கொண்டுள்ளது
வெளியீட்டு அறிக்கை உயர்ந்த நிலை கவர்தலை மேம்படுத்த மற்றும் சேர்க்க Red Hat Enterprise Linux 5.4இல் செயல்படுத்த கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

Red Hat Enterprise Linux 5.4க்கு வெளியீட்டு அறிக்கை வடிவம் மாற்றப்பட்டுள்ளது. வெளியீட்டு அறிக்கை இப்போது ஒரு முக்கியமான வசதி மேம்படுத்தல்கள், பிழைத்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்பார்வைகளை கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப குறிப்பு ஆவண விவரங்கள் அனைத்து மேம்படுத்த தொகுப்புகளுக்கும் தெரிந்த சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப முன்பார்வைகளை கொடுக்கிறது.

1. மெய்நிகராக்க மேம்படுத்தல்கள்

Red Hat Enterprise Linux 5.4 இப்போது Kernel-based Virtual Machine (KVM) ஹைபர்வைசர் x86_64 அடிப்படையான கணினிகளில் துணைபுரிகிறது. KVM லினக்ஸ் கர்னலில் இணைக்கப்பட்டுள்ளது, ஒரு மெய்நிகராக்க தளத்தை நிலைப்புத்தன்மை, வசதிகள் மற்றும் வன்பொருள் துணையை Red Hat Enterprise Linuxஇல் கொடுக்கிறது. மெய்நிகராக்கம் KVM ஹைபர்வைசரை பயன்படுத்தி துணைபுரிவது பரந்த விருந்தினர் இயக்கத்தளங்களுக்கு துணைபுரிகிறது:
  • Red Hat Enterprise Linux 3
  • Red Hat Enterprise Linux 4
  • Red Hat Enterprise Linux 5
  • Windows XP
  • Windows Server 2003
  • Windows Server 2008

முக்கியம்

Xen அடிப்படையான மெய்நிகராக்கம் முழுவதும் துணைபுரிகிறது. எனினும், Xen-அடிப்படையான மெய்நிகராக்கத்திற்கு கர்னலின் வேறு பதிப்பு தேவைப்படுகிறது. இந்தKVM ஹைபர்வைசர் சாதாரண (Xen அல்லாத) கர்னலில் மட்டுமே பயன்படும்.

எச்சரிக்கை

Xen மற்றும் KVM ஒரு கணினியில் நிறுவப்படலாம், முன்னிருப்பு பிணைய கட்டமைப்பு இதில் வேறுபட்டதாகும். பயனர்கள் கணினியில் ஒரு ஹைபர்வைசர் மட்டுமே நிறுவ பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

குறிப்பு

Xen Red Hat Enterprise Linuxஉடன் வரும் முன்னிருப்பு ஹைபர்வைசர் ஆகும். எனினும் அனைத்து கட்டமைப்பு முன்னிருப்புகளும் Xen ஹைபர்வைசரை பயன்படுத்துகின்றன. ஒரு கணினியை KVMஇல் கட்டமைப்பதற்கான விவரங்களுக்கு, மெய்நிகராக்க கையேட்டை பார்க்கவும்.
KVMஐ பயன்படுத்தும் மெய்நிகராக்கும் 32-பிட் மற்றும் 64-பிட் விருந்தினர் இயக்கத்தளங்கள் மாற்றமில்லாமல் இயக்க அனுமதிக்கிறது. பகுதி மெய்நிகராக்கப்பட்ட வட்டு மற்றும் பிணைய இயக்கிகள் Red Hat Enterprise Linux 5.4 இல் விரிவாக்கப்பட்ட I/O திறனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து libvirt அடிப்படையான கருவிகளும்(அதாவது. virsh, virt-install மற்றும் virt-manager) KVMக்கு துணைபுரிய சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
USB வழியாக KVM ஹைபர்வைசருடன் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக 5.4 வெளியீட்டில் வெளியிடப்படுகிறது.
பல்வேறு சிக்கல்களின் திரைத்திறன்: சேமி/மறுசேமி, லைவ் நகர்தல் மற்றும் கோர் ட்ம்ப்கள், Xen அடிப்படையான 32 பிட் பகுதி மெய்நிகராக்க விருந்தினர்கள் x86_64 புரவலன்களில் தொழில்நுட்ப முன்பார்வையாக வகைப்படுத்தவில்லை மற்றும் அவை Red Hat Enterprise Linux 5.4இல் முழுவதும் துணைபுரிகிறது.
இந்த etherboot தொகுப்பு இந்த மேம்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளது, Preboot eXecution Environment (PXE)ஐ பயன்படுத்தி விருந்தினர் மெய்நிகராக்க கணினிகளில் செயல்திறனை கொடுக்கிறது. இந்த செயல் OS ஏற்றப்படும் முன் நடக்கிறது மற்றும் சில சமயங்களில் OSக்கு இது PXE வழியாக தான் துவக்கப்படுகிறது என்பது தெரிவதில்லை. etherbootக்கான துணைபுரியும் வரம்பு KVM சூழலில் உள்ளது.
இந்த qspice தொகுப்புகள் Red Hat Enterprise Linux 5.4இல் spice நெறிமுறையை qemu-kvm அடிப்படையான மெய்நிகர் கணினிகளில் துணைபுரிய சேர்க்கப்பட்டுள்ளது. qspice கிளையன், சேவையகம் மற்றும் இணைய உலாவி கூடுதல் இணைப்பு கூறுகளை கொண்டுள்ளது. எனினும், qspice சேவையகம் qspice-libs package இல் முழுவதும் துணைபுரிகிறது. இந்த qspice கிளையன் (qspice தொகுப்பால் வழங்கப்பட்டது) மற்றும் qspice mozilla plugin (qspice-mozilla தொகுப்பால் வழங்கப்பட்டது) ஆகியவை தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டது. இந்த qspice-libs தொகுப்பு சேவையக செயல்படுத்தலை qemu-kvm உடன் பயன்படுத்தவும் முழுவதும் துணைபுரியவும் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் Red Hat Enterprise Linux 5.4 இல் libvirt துணைபுரிநல் spice நெறிமுறைக்கு; spiceக்கு Red Hat Enterprise Linux 5.4 இல் Red Hat Enterprise Virtualization மென்பொருளுக்கு மட்டுமே பயன்படுத்தி துணைபுரிகிறது.

2. கிளஸ்டரிங் மேம்படுத்தல்கள்

கிளஸ்டர்கள் என்பது பல கணினிகள் (முனைகள்) அளவீடு, நம்பகத்தன்மைகளை அதிகரித்து மற்றும் அவசியமான தயாரிப்பு சேவைகளுக்கு கிடைப்பவையாக இருக்கிறது.
அனைத்து Red Hat Enterprise Linux 5.4இன் கிளஸ்டர் மேம்படுத்தல்கள் பற்றிய விவரங்கள் தொழில்நுட்ப குறிப்புகளில் உள்ளது. Red Hat Enterprise Linux கிளஸ்டரிங் பற்றிய மேலும் தகவல்கள் Cluster Suite Overview மற்றும் Cluster Administration ஆவணங்களில் உள்ளன.
கிளஸ்டர் தொகுப்பு கருவிகள் தானியக்க ஹைபர்வைசர் கண்டறிதலை மேம்படுத்துகிறது. எனினும், இயங்கும் கிளஸ்டர் தொகுப்பு KVM ஹைபர்வைசருடன் இணைந்து ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
OpenAIS இப்போது multicastஇல் கூடுதலாக பிணைய தொடர்புகளை ஒலிபரப்ப கொடுக்கப்படுகிறது. இந்த செயல்பாடு OpenAIS மற்றும் கிளஸ்டர் தொகுப்புடன் தனியாக தொழில்நுட்ப முன்பார்வையாக எடுத்துகொள்ளப்படுகிறது. குறிப்பாக, OpenAISஐ கட்டமைத்து கிளஸ்டர் மேலாண்மை கருவிகளை ஒருங்கிணைக்க மற்றும் கைமுறையாக கட்டமைக்க வேண்டும்.

குறிப்பு

SELinux வலியுறுத்தல் முறைமை கிளஸ்டர் தொகுப்பில் துணைபுரிவதில்லை; அனுமதி அல்லது செயல்நீக்க முறைமைகள் பயன்படுத்தப்பட வேண்டும். கிளஸ்டர் தொகுப்பை பார் மெட்டலாக PPC கணினிகளில் துணைபுரியாது. விருந்தினர் VMWare ESX புரலவன்களில் கிளஸ்டர் தொகுப்பை இயக்கி fence_vmwareஐ பயன்படுத்தினால் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. கிளஸ்டர் தொகுப்பு விருந்தனர்களாக VMWare ESX புரவலன்களில் இயங்குவது மெய்நிகர் மையங்களில் துணைபுரிவதில்லை.
கிளஸ்டர் தொகுப்பை பயன்படுத்தும் கலவையான கணினி கிளஸ்டர்களுக்கு துணைபுரியவில்லை. அனைத்து முறைகளும் கிளஸ்டரில் ஒரே கணினியமைப்பை கொண்டிருக்க வேண்டும். கிளஸ்டர் தொகுப்பின் நோக்கமாக, x86_64, x86 மற்றும் ia64 அதே வடிவமைப்பாக இந்த வடிவமைப்புகளின் கலவையாக துணைபுரிகிறது.

2.1. ஃபென்சிங் வளர்ச்சிகள்

ஃபென்சிங் என்பது கிளஸ்டர் பகிரப்பட்ட சேமிப்பகத்தில் ஒரு முனை துண்டிக்கப்படுவதாகும். ஃபென்சிங் I/O பகிரப்பட்ட சேமிப்பகத்திலிருந்து வெட்டப்படுகிறது, எனவே தரவு ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
Red Hat Enterprise Linux 5.4இல், ஃபென்சிங் துணை Power கணினிகளில் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. IBM Logical Partition (LPAR) நிகழ்வுகளில் Hardware Management Console (HMC)ஐ பயன்படுத்தி மேலாண்மை செய்யப்படுகிறது (BZ#485700). ஃபென்சிங் துணை Cisco MDS 9124 & Cisco MDS 9134 Multilayer Fabric Switchesக்கு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது (BZ#480836).
இந்த fence_virsh ஃபென்ஸ் முகவர் இந்த Red Hat Enterprise Linux இல் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டது. fence_virsh ஒரு விருந்தினர்க்கு (ஒரு domUஆக இயங்குவது) வேறு libvirt நெறிமுறையை பயன்படுத்தி செயல்படுகிறது. எனினும், fence_virsh கிளஸ்டர் தொகுப்புடன் ஒருங்கிணைக்கப்படாத ஃபென்ஸுடன் துணைபுரியாத சூழலை கொண்டுள்ளது.
கூடுதலாக, பின்வரும் புதிய கட்டுரை ஃபென்சிங் பற்றியது Red Hat Knowledge Baseஇல் வெளியிடப்பட்டது:

3. பிணைய மேம்படுத்தல்கள்

இந்த மேம்படுத்தலில், Generic Receive Offload (GRO) சேவை கர்னல் மற்றும் பயனர் இட பயன்பாடுகளில் செயல்படுத்தப்பட்டது, ethtool.((BZ#499347)) இந்த GRO அமைப்பு பிணைய இணைப்புகளை Central Processing Unit (CPU)ஆல் குறைந்த அளவு செயல்படுத்தும் திறனை கொடுத்து செயல்திறனை அதிகரிக்கிறது. GRO அதே போல Large Receive Offload (LRO) அமைப்பையும் செயல்படுத்துகிறது, ஆனால் இது ஒரு பரந்த வரம்பு போக்குவரத்து அடுக்கு நெறிமுறைகள் ஆகும். GRO பல்வேறு பிணைய சாதன இயக்கிகளுக்கு துணை சேர்க்கிறது, igb இயக்கியை Intel® Gigabit Ethernet அடாப்டர்களுக்கு மற்றும் ixgbe இயக்கியை Intel 10 Gigabit PCI Express பிணைய சாதனங்களையும் சேர்த்து துணைபுரிகிறது.
இந்த Netfilter framework (பிணைய பாக்கெட் வடித்தலில் கர்னலின் பகுதிக்கு பொறுப்புள்ளதாக இருக்கிறது) Differentiated Services Code Point (DSCP) மதிப்புகளுக்கு துணை சேர்க்க மேம்படுத்தப்பட்டுள்ளது
இந்த bind (Berkeley Internet Name Domain) தொகுப்பு DNS (Domain Name System) நெறிமுறைகளை செயல்படுத்த வழங்கப்படுகிறது. முன்பு, bind ஒரு எளிய வேறுபாட்டை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பதில்களை பெறும் நுட்பத்தை பெற்றிருக்கவில்லை. தொடர்ச்சியாக, ஒரு தவறான கட்டமைக்கப்பட்ட சேவையகம் மறுக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது. இந்த மேம்படுத்தலில், bind மேம்படுத்தப்பட்டுள்ளது, allow-query-cache என்ற புதிய விருப்பம் மூலும் இது ஒரு சேவையகத்தில் அங்கீகரிக்கப்படாத தரவை அணுக கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது (எடுத்துக்காட்டு: cached recursive results மற்றும் root zone hits). (BZ#483708)

4. கோப்புமுறைமைகள் மேம்படுத்தல்கள்

5.4 updateஇலில், பல்வேறு குறிப்பிட்ட சேர்த்தல்கள் கோப்பு முறைமைகளில் துணைபுரிதலில் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படை Red Hat Enterprise Linux இப்போது Filesystem in Userspace (FUSE) கர்னல் தொகுதிகள் மற்றும் பயனர் இட வசதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் பயனர்களை அவர்களின் சொந்த FUSE கோப்பு முறைமையை நிறுவி மாற்றப்படாத Red Hat Enterprise Linux kernel இல் இயக்குகிறது (BZ#457975). இந்த XFS கோப்பு முறைமை கர்னலில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது (BZ#470845). இந்த FIEMAP உள்ளீடு/வெளிப்பாடு கட்டுப்பாடு (ioctl) முகப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது, பருநிலை அமைப்புகளில் போதுமான கோப்புகளை அனுமதிக்கிறது. இந்த FIEMAP ioctl பயன்பாடுகளால் பயன்படுத்தப்பட்டு குறிப்பிட்ட கோப்பு ஒருங்கிணைப்பது அல்லது ஒதுக்கப்பட்டு கோப்பிணை ஒருங்கிணைப்புது உருவாக்கப்படும் (BZ#296951).
கூடுதலாக, இந்த Common Internet File System (CIFS) கர்னலில் மேம்படுத்தப்பட்டது (BZ#465143). இந்த ext4 கோப்பு முறைமையும் (Red Hat Enterprise Linux இல் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டது) மேம்படுத்தப்பட்டது (BZ#485315).
Red Hat Enterprise Linux 5.4இல், Global File System 2 (GFS2) இன் பயன்பாடு ஒரு ஒற்றை சேவையக கோப்பு முறைமையாக இருப்பது (அதாவது கூட்டு சூழலில் இருக்காது) நீக்கப்பட்டது. GFS2இன் பயனர் வேறு கோப்பு முறைமைகளான ext3 அல்லது xfs போன்றவற்றுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த xfs கோப்பு முறைமை பெரிய கோப்பு முறைமைகளுக்கு இலக்கிடப்படுகிறது (16 TB மற்றும் அதற்கு மேல்). இருக்கும் பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்படும்.
தேவையான சிமென்டிக்கிற்கு ஒரு செயல் stat, write, statஐ முடிப்பது, ஒரு வேறுபட்ட mtime (கடைசி மாற்றப்பட்ட நேரம்) ஐ இரண்டும் stat அழைப்பில் இந்த mtime இல் முதல் stat அழைப்பிலிருந்து முடிவுகளை காண்கிறது. கோப்பு நேரங்கள் NFS இல் சேவையகத்தில் கண்டிப்பாக பராமரிக்கப்படுகிறது, எனவே இந்த கோப்பு mtime சேவையகத்தின் வழியாக பரிமாற்றப்படும் வரை WRITE NFS நெறிமுறை செயல்பாடு மேம்படுத்தப்படுத்தப்படாது. pagecache இல் தரவை நகலெடுப்பது mtimeஐ மேம்படுத்த போதுமானதாக இருக்காது. இது NFS உள்ளமை கோப்பு முறையில் வேறுபடுவதை காட்டுகிறது. எனவே, ஒரு NFS கோப்பு முறைமை stat அழைப்புகளில் அதிக பழு ஒரு அதிக வெற்றிடத்தை கொண்டிருக்கும்.(BZ#469848)
இந்த ext4 கோப்பு முறைமை தொழில்நுட்ப முன்பார்வையாக மேம்படுத்தப்பட்டு பயனர் இட கருவிகளாக பயன்படுத்தப்படுகிறது. Ext4 ext3 கோப்பு முறையில் மேம்படுத்தப்பட்டதாக Red Hat மற்றும் லினக்ஸ் சமூகத்தால் உருவாக்கப்பட்டது.

குறிப்பு

Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகளில் ext4 தொழில்நுட்ப முன்பார்வை, ext4 கோப்பு முறைமைகள் ext4dev என பெயரிடப்பட்டது. இந்த மேம்படுத்தலில், ext4 கோப்பு முறைமைகள் ext4என பெயரிடப்பட்டுள்ளது.
samba3x மற்றும் ctdb ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக x86_64 கணினிகளில் கொடுக்கப்பட்டுள்ளத்து. Samba3x தொகுப்பு Samba 3.3 மற்றும் ctdbஐ ஒரு கூட்டு TDB பின்தளமாக சேர்த்துள்ளது. இந்த samba3x மற்றும் ctdb ஒரு கிளஸ்டர் முனைகளில் GFS கோப்பு முறைமைகிளல் கூட்டு CIFS கோப்பு முறைமையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கூறுகள் ஒரு மாற்று சேய் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது அவை samba தொகுப்பிலிருந்து கிளையன் மற்றும் சேவையக குழுக்களுக்கு கோப்புகளை நிறுவுவதல் முரண்படுகிறது

5. பணிமேடை மேம்படுத்தல்கள்

5.1. கூடுதல் லினக்ஸ் ஒலி வடிவமைப்பு

Red Hat Enterprise Linux 5.4இல், இந்த Advanced Linux Sound Architecture (ALSA) மேம்படுத்தப்பட்டது — High Definiton Audio (HDA)க்கு கூடுதல் துணையை வழங்குகிறது.

5.2. வரைகலை டிரைவர்கள்

இந்த ati இயக்கிகள் ATI வீடியோ சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது.
இந்த i810 மற்றும் intel இயக்கிகள் இன்டல் ஒருங்கமைக்கப்பட்ட காட்சி சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது.
இந்த mga இயக்கிகள் Matrox வீடியோ சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது.
இந்த nv இயக்கி nVidia வீடியோ சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது.

5.3. லேப்டாப் சேவை

முன்பு, டாக் ஸ்டேஷனிலிருந்து சில மடிக்கணினிகளை எடுக்கும் போது அல்லது வைக்கும் போது CD/DVD இயக்கிகளை அது கொண்டிருந்தால், இந்த இயக்கி அறியப்படாது. இயக்கி அறிப்பட கணினியை மறுதுவக்க வேண்டும். இந்த மேம்படுத்தலில், இந்த ACPI டாக்கிங் இயக்கிகள் கர்னலில் மேம்படுத்தப்பட்டு, இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது. (BZ#485181).

6. கருவி மேம்படுத்தல்கள்

  • SystemTap இப்போது முழுவதும் துணைபுரிகிறது, மற்றும் சமீபத்திய அப்ஸ்டீரிம் பதிப்புக்கு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்புடத்தல் பகிரப்பட்ட நூலக்ங்கள் வழியாக பயனர் இடத்தை ஆய்வு செய்ய வளர்ச்சி பெற்றத், பரிசோதனை DWARF unwinding, மற்றும் ஒரு புதிய <sys/sdt.h> தலைப்பு கோப்பு dtrace-ஏற்ற குறிகளை கொடுக்கிறது.
    இந்த மறுவடிவமைப்பு debuginfo-less செயல்களுக்கு துணைபுரிதலை விரிவடைய செய்கிறது. Typecasting (@cast ஆப்ரேட்டர் வழியாக) இப்போது கர்னல் ஆய்வு செய்தல் மூலும் துணைபுரிகிறது. பல்வேறு 'kprobe.*' ஆய்வு பிழைகள் debuginfo-less செயல்பாடுகள் தடுப்பது இப்போது சரி செய்யப்பட்டது.
    SystemTap பல்வேறு ஆவண வளர்ச்சிகளை கொண்டுள்ளது. ஒரு புதிய '3stap' வசதி பயனர்களை பயனுள்ள உதவி பக்கங்களை பல்வேறு SystemTap ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளில் கொண்டுள்ளது. இந்த systemtap-testsuite தொகுப்பு ஒரு பெரிய நூலக மாதிரி ஸ்கிரிப்ட்டுகளையும் கொண்டுள்ளது.
    SystemTap மறுவடிவமைப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு, SystemTap பிரிவை தொழில்நுட்ப குறிப்புகளில் தொகுப்பு மேம்படுத்தல்கள் அத்தியாயத்தில் பார்க்கவும்.
  • Systemtap தேடும்புள்ளிகள் கர்னலின் முக்கியமான பிரிவிகளில் வைக்கப்பட்டுள்ளது, இது கணினி நிர்வாகிகளை குறியீட்டின் செயல்திறன் மற்றும் பிழைத்திருத்த பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. Red Hat Enterprise Linux 5.4இல், தேடும்புள்ளிகள் கர்னல் துணை அமைப்புகளில் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக பின்வரும் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது:
    • நினைவக மேலாண்மை (mm) (BZ#493444)
    • தடுப்பு சாதனம் I/O (blktrace)(Bugzilla #493454)
    • பிணைய கோப்பு முறைமை (NFS) (BZ#499008)
    • பக்க கேஷ் மற்றும் பிணைய ஸ்டேக்ஸ் (BZ#475719)
    • திட்டமிடுதல் (BZ#497414)
  • இந்த Gnu Compiler Collection பதிப்பு 4.4 (GCC4.4) இப்போது இந்த வெளியீட்டில் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டது. இந்த தொகுப்பு C, C++, மற்றும் Fortran கம்பைலர்களை அதன் துணைபுரியும் நூலகங்களுடன் கொண்டுள்ளது.
  • glibc new MALLOC behaviour:அப்ஸ்டீரீம் glibc சமீபத்தில் உயர்ந்த ஸ்காலபிலிட்டியையும்.அதிக சாக்கெட்டுகள் மற்றும் கோர்களும் மாற்றுகிறது.இது தங்களுடைய சொந்த நினைவக பூலில் நூலை ஒதுக்குவதைப் போலும் சில தருணங்களை தடுத்தும் பூட்டவும் செய்கிறது. கூடுதல் நினைவக்கம் நினைவக பூல்களையும் (ஏதாவது இருந்தால்) சுற்றுப்புற மாறிகளான MALLOC_ARENA_TEST மற்றும் MALLOC_ARENA_MAX கட்டுப்படுத்த பயன்படுகிறது.
    MALLOC_ARENA_TEST ஒரு சோதனை கோர்களின் எண்ணிக்கைக்கு இந்த மதிப்பை நினைவக பூல்களில் செயல்படுத்தும் போது அடைகிறது. MALLOC_ARENA_MAX அதிகபட்ச நினைவக பூல்களை பயன்படுத்துகிறது கோர்களின் எண்ணிக்கையை அல்ல.
    இந்த glibc RHEL 5.4 வெளியிட்டில் அப்ஸ்டீரீம் mallocஇல் தொழில்நுட்ப முன்பார்வையாக இந்த செயல்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த த்ரட் நினைவக பூல்களை செயல்படுத்த MALLOC_PER_THREAD சூழல் மாறியை அமைக்க வேண்டும். இந்த சூழல் மாறி இந்த புதிய malloc behaviour முன்னிருப்பாக எதிர்வரும் வெளியீட்டில் மாறும் போது நீக்கப்படும். பயனர்கள் malloc மூலங்களுக்கு இந்த விருப்பத்தை செயல்படுத்துகிறது.

7. வடிவமைப்பு குறிப்பிட்ட சேவை

7.1. i386

  • ஒரு மெய்நிகர் சூழலில், நேரம் காப்பது Red Hat Enterprise Linux 64-பிட் கர்னலுக்கு நேரம் கடைபிடிக்கப்பட்டாலும் சிக்கலானதே. இந்த தடங்கல்களில் மெய்நிகராக்க கணினிகளில் மறு திட்டமிடும் போது ஒரு தாமதம் ஏற்படலாம். இந்த கர்னல் வெளியீடு இந்த நேரம் காக்கும் அல்காரிதத்தை மறு கட்டமைத்து நேரம் முடிதல் கவுண்டரை கொடுக்கிறது (Bugzilla #463573)
  • இது, ~4GB அளவுக்கு அதிகமாக ஸ்டேக்களை கொண்டிருந்தால், 64-பிட் திரட் பயன்பாடுகள் pthread_create()இல் மெதுவாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது glibc MAP_32BIT ஐ ஒதுக்கப்பட்ட ஸ்டேக்கில் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகும். MAP_32BITஇல் பயன்படுத்துவது ஒரு லிகசி செயல்படுத்தலாகும், இந்த மேம்படுத்தல் ஒரு புதிய கொடியை (MAP_STACK mmap) கர்னலுக்கு 64-பிட் பயன்பாடுகளை தவிர்க்க சேர்க்கப்படுகிறது. (Bugzilla #459321)
  • மேம்படுத்தல் ஒரு வசதி பிட் TSCகளை deep-C நிலைகளில் இயக்க சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிட் NONSTOP_TSC CONSTANT_TSC உடன் இணைப்புடன் உள்ளது. CONSTANT_TSC TSC நிலையான அலைவரிசையில் P/T- states இல் இயங்குகிறது என குறிக்கிறது மற்றும் NONSTOP_TSC TSC deep C-statesஇல் உள்ளது என குறிக்கிறது. (Bugzilla #474091)
  • இந்த மேம்படுத்தல் ஒரு பின்னணிப்பை asm-x86_64 தலைப்புகளில் kernel-devel தொகுப்புகளில் i386, i486, i586 மற்றும் i686 கணினிகளில் சேர்த்துள்ளது. (Bugzilla #491775)
  • இந்த மேம்படுத்தல் ஒரு தீர்வை memmap=X$Y ஒரு துவக்க அளவுருவாக i386 கணினிகளில் ஒரு புதிய BIOS ஒப்பீட்டுடன் குறிப்பிடுகிறது. (Bugzilla #464500)
  • இந்த மேம்படுத்தல் ஒரு பின்னணைப்பை Non-Maskable Interrupt (NMI)க்கு முந்தைய கர்னல் வெளியீடுகளில் தோன்ற செய்ய சேர்க்கிறது. இந்த சிக்கல் பல்வேறு Intel செயலிகளில் தோன்றி பாதித்து NMI watchdog 'stuck' என அறிக்கையிடுகிறது. புதிய அளவுருக்கள் NMI குறியீட்டில் இந்த சிக்கலை சரி செய்கிறது. (Bugzilla #500892)
  • இந்த வெளியீடுPCI டொமைன் துணையைHP xw9400 மற்றும் xw9300 கணினிகளுக்கு மறு அறிமுகப்படுத்துகிறது. (Bugzilla #474891)
  • powernow-k8 அளவுருக்களின் செயல்பாடு /sys/modulesக்கு ஏற்றப்பட்டுள்ளது சரி செய்யப்பட்டது. இந்த தகவல் முன்பு ஏற்றப்படவில்லை.(Bugzilla #492010)

7.2. x86_64

  • ஒரு ஒத்திசைவு பிழை linux-2.6-misc-utrace-update.patchஇல் காணப்பட்டது. 32-பிட் செயல்களை ஒரு 64-பிட் கணினியில் இயங்கும்போது ENOSYSஐ (அட்டவணை வரம்பிற்கு வெளியே) கணினி அழைப்புகளில் கொடுக்கவில்லை. இந்த கர்னல் வெளியீடு இதனை சரி செய்ய சேர்க்கப்பட்டுள்ளது. (Bugzilla #481682)
  • சில கிளஸ்டர் கணினிகள் நிலையில்லாத நேர மூலம் மூலம் துவக்கப்படுகிறது. இது கர்னல் குறியீடு ஒரு வெற்று செயல்திறன் கவுண்டரை சரி பார்க்காமல் வரையறுக்கப்படுகிறது (PERFCTR) TSC (Time Stamp Clock)ஐ துவக்கும் போது ஒத்திசைக்கிறது. இந்த முடிவு, ஒரு சிறிய சதவீகிதத்தில், ஒரு பளுவான PERFCTR ஐ பெறும் போது நிகழ்நிலை தன்மையில்லாமல் இருக்கிறது.
    ஒரு பிழைத்திருத்தம் ஒரு வெற்று PERFCTR தவறு செய்வதற்கு முன் இந்த கணினி சரிபார்த்தலை செய்வதற்கு முன் செயல்படுத்தப்பட்டது (Bugzilla #467782). இந்த திருத்தம், அனைத்து இருக்கும் இணைக்கும் போது PERFCTRகள் பிஸியாக இருக்கும் போது TSC க்கு தேவைப்படும் போது செயல்புரியாது. வேறு பின்னிணைப்பு ஒரு கர்னல் பீதி (1% இல் குறைவாக) இந்த காட்சியில் நடப்பது போல நடக்காமல் இருக்க சேர்க்கப்பட்டுள்ளது. (Bugzilla #472523).

7.3. PPC

  • இந்த கர்ன்ல் வெளியீடு பல்வேறு இணைப்புகள் spufs (Synergistic Processing Units file system) செயல் செயலிகளுக்கு மேம்படுத்துகிறது. (Bugzilla #475620)
  • ஒரு சிக்கல் /proc/cpuinfo தருக்க PVR Power7 செயலி கணினியில் "தெரியாத" என பட்டியலிடப்பட்டுள்ளது show_cpuinfo() இயக்கப்பட்ட போது. இந்த மேம்படுத்தல் ஒரு பின்னிணைப்பை show_cpuinfo() Power7 கணினிகளில் Power6ஆக அடையாளப்படுத்தி சேர்க்கிறது. (Bugzilla #486649)
  • இந்த மேம்படுத்தல் பல்வேறு பின்னிணைப்புகளை கொண்டு MSI-X (Message Signaled Interrupts) துணைபுரிதலை சேர்க்க/மேம்படுத்த தேவைப்படுகிறது System P செயலிகளை கொண்டு. (Bugzilla #492580)
  • ஒரு பின்னிணைப்பு இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டு முந்தைய சிக்கலான மின் பொத்தான் செல் ப்ளேடுகள் கணினியில் செயல்படுத்துகிறது. (Bugzilla #475658)

7.4. s390

Red Hat Enterprise Linux ஒரு பரந்த வரம்பில் புதிய வசதிகளை IBM System z கணினிகளுக்கு கொண்டுள்ளது:
  • Utilizing Named Saved Segments (NSS), இந்த z/VM ஹைபர்வைசர் இயக்கத்தள குறியீட்டை பகிரப்பட்ட நினைவக பக்கங்களில் z/VM விருந்தினர் மெய்நிகர் கணினிகளில் கிடைக்கும் படி செய்கிறது. இந்த மேம்படுத்தலில், பல Red Hat Enterprise Linux விருந்தினர் இயக்கத்தள கணினிகள் z/VM இல் NSS லிருந்து துவக்குகிறது மற்றும் நினைவகத்தில் ஒரு ஒற்றை லினக்ஸ் கர்னல் நகலாக இயங்குகிறது. (BZ#474646)
  • சாதன இயக்கி துணைபுரிதல் இந்த மேம்படுத்தலில் புதிய IBM System z PCI cryptography acceleratorகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளது, இது முந்தைய பதிப்புகளை போன்ற அதே முகப்புகளை கொண்டுள்ளது. (BZ#488496)
  • Red Hat Enterprise Linux 5.4 செயலி குறைத்தலுக்கு துணைபுரிதல் சேர்க்கிறது, சில சமயங்களில் செயலி வேகத்தை குறைக்க இது அனுமதிக்கிறது (அதாவது கணினி அதிக வெப்பமடையும் போது). (BZ#474664) இந்த புதிய வசதி தானியக்க மென்பொருளை கணினி நிலையை அறிய செய்து குறிப்பிட்ட கொள்கையின் படி செயல்புரிகிறது.

    குறிப்பு

    செயலி குறைத்தல் z990, z890 மற்றும் பின்னர் வந்த கணினிகளில் துணைபுரிகிறது மற்றும் இது SCLP கணினி சேவை நிகழ்வு வகை 4 event qualifier 3இல் வழியாக உணரப்படுகிறது. STSI புதிய செயலி கொள்திறனை இந்த கோப்பில் அறிக்கையிடும்: /sys/devices/system/cpu/cpuN/capability.
  • Control Program Identification (CPI) விவரிப்பு தரவு தனிப்பட்ட கணினிகளை Hardware Management Console (HMC)இல் அடையாளப்படுத்த பயன்படுகிறது. இந்த மேம்படுத்தலில், CPI தரவு இப்போது ஒரு Red Hat Enterprise Linux நிகழ்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது. (BZ#475820)
    CPIஐ பற்றிய மேலும் விவரங்கள்க்குசாதன இயக்கிகள், வசதிகள் மற்றும் கட்டளைகள் ஆவணம் போன்றவற்றைப் பார்க்கவும்
  • Fibre Channel Protocol (FCP) செயல்திறன் தரவு Red Hat Enterprise Linux நிகழ்வுகளில் இப்போது IBM System z கணினிகளில் அளவிடப்படுகிறது. (BZ#475334) மெட்ரிக்கள் சேகரிப்பு மற்றும் அறிக்கையிடப்பட்டது:
    • செயல்திறன் தொடர்பான தரவு ஸ்டேக் கூறுகளான Linux சாதனங்கள், Small Computer System Interface (SCSI) Logical Unit Numbers (LUNs) மற்றும் Host Bus Adapter (HBA) சேமிப்பக கட்டுப்படுத்தி தகவல்.
    • ஸ்டேக்கிற்கான கூறு: தொடர்பான அளவீடுகளுக்கு நடப்பு மதிப்புகள் வசதிகள் மற்றும் வேறு செயல்படுத்தும் அளவீடுகள்.
    • I/O வுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் திரட்டிகள் (குறைந்தபட்சம், அதிகபட்சம், சராசரிகள் மற்றும் ஹிஸ்டோகிராம்) அளவு, கூறுகள் மற்றும் மொத்தங்களை கொண்டுள்ளது.
  • EMC Symmetrix Control I/Oஐ வழங்க கர்னலில் சேவை சேர்க்கப்பட்டது. இந்த மேம்படுத்தல் EMC Symmetrix சேமிப்பக வரிசைகளை Red Hat Enterprise Linux ஐ IBM System z கணினிகளில் மேலாண்மை செய்யும் திறனை கொடுக்கிறது. (BZ#461288)
  • ஒரு புதிய வசதி கர்னலில் செயல்படுத்தப்பட்டு ஒரு Initial Program Load (IPL) ஐ ஒரு Red Hat Enterprise Linux மெய்நிகர் கணினியில் உடனடியாக ஒரு கர்னல் பீதி மற்றும் டம்பை கொண்டுள்ளது.(BZ#474688)
  • வன்பொருள் டோபாலஜி வசதி கட்டமைப்புக்கு துணைபுரிவது கணினி டோபாலஜி தகவலை திட்டப்படுத்திக்கு அனுப்புகிறது, அதனை பளு சமநிலைப்படுத்தும் தீர்மானத்திற்கு அனுமதிக்கிறது. கணினிகளில் I/O தடங்கல்கள் சமமில்லாமல் விநியோகிக்கப்படுகிறது, CPUகள் ஒரு குழுவாக இருந்து நிறைய I/O தடங்கல்களை கொடுத்து சில சமயங்களில் செயல்திறன் சிக்கல்களை கொடுக்கிறது.
    முன்பு, CPU topology சேவை முன்னிருப்பாக செயல்படுத்தப்பட்டிருந்தது. இந்த மேம்படுத்தலில், CPU topology சேவை முன்னிருப்பாக செயல்நீக்கப்பட்டிருக்கிறது மற்றும் கர்னல் அளவுரு "topology=on" சேர்க்கப்பட்டு இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. (BZ#475797)
  • புதிய கர்னல் விருப்பங்கள் IPL கட்டளையை பயன்படுத்தி சேர்க்கப்பட்டு CMS parmfile இன் உள்ளடக்கத்தை மாற்றாமல் பயன்படுத்துகிறது, கர்னல் விருப்பங்களை தற்காலிகமாக எழுத ஏற்கனவே parmfile ஆல் விருப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த முழு துவக்க கட்டளை வரியும் VM அளவுரு சரத்தால் மாற்றப்படுகிறது, parmfileஇலிருந்து கர்னல் விருப்பங்களை பைபாஸ் செய்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் புதிய லினக்ஸ் Named Saved Systems (NSS) ஐ CP/CMS கட்டளைவரியில் உருவாக்கலாம். (BZ#475530)
  • இந்த qeth இயக்கி HiperSockets Layer3 சேவையை IPv6க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. (BZ#475572) இந்த வசதி பற்றிய மேலும் விவரங்களுக்கு, "qeth device driver for OSA-Express (QDIO) மற்றும் HiperSockets" அத்தியாயங்களை IBMஇன் "Device Drivers, Features, and Commands" புத்தகத்தில்: http://www.ibm.com/developerworks/linux/linux390/october2005_documentation.htmlஇல் பார்க்கவும்
  • z9 HiperSocket firmware ஐ துவக்குகையில் வேறு வடிவத்தில் பதிவு சரத்தை கொடுக்கிறது. இந்த மாற்றம் விடுபட்ட mcl_level தகவலை qeth நிலை செய்தியில் சாதனத்தின் ஆன்லைன் அமைவில் கொடுக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட qeth இயக்கி இப்போது சரியாக HiperSocketsஇன் புதிய பதிவு சர வடிவத்தை வாசிக்கிறது, மற்றும் வெளிப்பாடு வடிவத்தின் தரப்படுத்தலுக்கும் அனுமதிக்கிறது. (BZ#479881)
  • Red Hat Enterprise Linux 5.4இல், இந்த s390utils தொகுப்பு பதிப்பு 1.8.1இல் மறுதளமிடப்பட்டது. முழு வசதிகள் பட்டியலை பார்க்க, தொகுப்பு மேம்படுத்தல் பிரிவில் தொழில்நுட்ப குறிப்புகள். (BZ#477189) என்பதை பார்க்கவும்
  • கர்னலில், ஒரு sysfs முகப்பு தொடர்புடைய செயல்களுக்கு பணிநிறுத்த ட்ரிகர்களை செயல்படுத்த உள்ளது. இந்த வசதி பற்றிய மேலும் விவரங்களுக்கு "Shutdown actions" அத்தியாயத்தில் IBM's "Device Drivers, Features, and Commands" புத்தகத்தில் பார்க்கவும்: http://www.ibm.com/developerworks/linux/linux390/development_documentation.html

8.1. பொதுவான கர்னல் வசதி துணை

  • முன்புர அப்ஸ்டீரிம் கர்னலில் ரா சாதனங்களுக்கு துணைபுரிந்தது நீக்கப்பட்டது. எனினும்,இந்த துணைபுரிதல் கர்னகலுக்கு திருப்பப்பட்டது. தொடர்ந்து Red Hat Enterprise Linux 5.4இல், ரா சாதனங்களுக்கு துணைபுரிவது திருப்பப்பட்டது. கூடுதலாக, இந்த initscriptகள் தொகுத்துகள் மேம்படுத்தப்பட்டது, முந்தைய விடுபட்ட ரா சாதன செயல்பாடுகளை சேர்க்கிறது.(BZ#472891)
  • KVM guest-smp tlb mmu-notifiersஇல்லாமல் ஒரு KVM நினைவக அழிப்பாக பக்கங்களை கர்னல் பட்டியலில் சேர்க்கலாம் மற்ற vcpu விருந்தினர் முறைமையில் எழுதப்படலாம். இந்த மேம்படுத்தல் mmu-notifier துணைபுரிதலை கர்னலுக்கு சேர்த்து முந்தைய பின்னணைப்பில் உள்ள பிழையை mm_struct இல் இருக்கும் இயக்கியில் வளர்வது kABI சரிபார்த்த தோல்வியை சரி செய்கிறது. இந்த பிழை ஒரு அட்டவணையைப் பயன்படுத்தி சரி செய்யப்பட்டது பயன்படுத்தப்படாத துளையில் வடிவமைப்பு அளவு விரிவடைவதை தடுக்கிறது.(Bugzilla #485718)
  • சுட்டிகள் மற்றும் கையொப்பமிட்ட அரித்மெட்டிக் மேல்பாய்வு முன்பு லிக்னஸ் கர்னலில் குறிப்பிடப்படவில்லை. இது GCC (GNU C Compiler)ஐ மடித்தல் ஏற்படாமல் அரித்மெட்டிக் ஒத்திசைவு மேல் பாய்வு சோதனைக்கு தேவைப்படலாம் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மேம்படுத்தல் -fwrapv மாறியை GCC CFLAGS இல் சேர்த்து மடித்தல் பண்பை வரையறுக்கிறது.(Bugzilla #491266)
  • ஒரே நினைவக இடத்தில் உயர்தர கணினிகில் உள்ளடக்கங்களை பணிகளுக்கிடையே வழங்க சமீபத்தில் TPC-C (Transaction Processing Council) அல் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் fast-gup பின்னிணைப்பை நேரடி IOஐ பயன்படுத்தியும் மற்றும் ஒரு குறிப்பிட்ட (9-10% வரை) செயல்திறன் வளர்ச்சியை கொடுக்கிறது. இந்த மேம்படுத்தல் முழுவதும் சோதிக்கப்பட்டு மற்றும் இது 5.4 கர்னலில் பயன்படுத்தப்பட்டு அளவிடுதலை மேம்படுத்துகிறது. மேலும் தகவலுக்கு இந்த கட்டுரையை பார்க்கவும். (Bugzilla #474913)
  • புதிய மாற்றக்கூடிய அளவுரு இந்த கர்னலில் சேர்க்கப்பட்டுள்ளது, இது கணினி நிர்வாகிகளை அதிகப்டச மாற்றப்பட்ட பக்கங்களை kupdate இல் வட்டில் ஒவ்வொரு முறை இயங்கும் போது எழுத அனுமதிக்கிறது. இந்த புதிய மாற்றக்கூடிய /proc/sys/vm/max_writeback_pages முன்னிருப்பு மதிப்பு 1024 அல்லது 4MB எனவே அதிகபட்சம் 1024 பக்கங்கள் kupdateஇல் வெளியிடப்படும். (Bugzilla #479079).
  • ஒரு புதிய விருப்பம் (CONFIG_TASK_IO_ACCOUNTING=y) கர்னலில் சேர்க்கப்பட்டு IO புள்ளிவிவரங்களை ஒரு செயலுக்கு கண்காணிக்க உதவுகிறது. இது பிழைத்திருத்தங்களுடன் ஒரு தயாரிப்பு சூழலில் உதவுகிறது. (Bugzilla #461636)
  • முந்தைய கர்னல்களில், பின்சேமிப்பு பணிகள் DB2 சேவையகத்தின் பொறுப்பாகும். இது /proc/sys/vm/dirty_ratio பணிகளை தடுத்து pagecache நினைவகத்தில் எழுதுகிறது ஒப்பிடப்படாத pagecache நினைவகம் நன்றாக இல்லாமல் உள்ளது (dirty_ratio 100% என அமைக்கப்பட்டாலும்). ஒரு மாற்றம் இந்த கர்னல் மேம்படுத்தலில் வரம்பிற்குட்பட்ட பண்புகளை கொடுத்தால். இப்போது dirty_ratio 100% என அமைக்கப்பட்டால், இந்த கணினி pagecache நினைவகத்தில் எழுத வரம்பிடப்படுவதில்லை. (Bugzilla #295291)
  • இந்த rd_blocksize விருப்பம் முந்தைய கர்னல் ramdisk இயக்கியில் பெரிய ramdiskகளை ஒரு கணினி ஏற்றலில் செயல்படுத்தும் போது தரவு அழித்தலை ஏற்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல் தேவையில்லாத விருப்பங்களை நீக்கி இந்த சிக்கலை தீர்க்கிறது. (Bugzilla #480663)
  • இந்த செயல்பாடு getrusage ஒரு செயலின் மூல பயன்பாட்டை ஆராய பயன்படுகிறது. இது மூல பயன்பாட்டில் சிக்கல்களை ஆராய்ந்து தரவுகளை சேகரிப்பதில் பயனுள்ளதா இருக்கிறது. getrusageஆல் பணி நடைபெறும் போது சேய் பணிகளின் த்ரட்களில் செய்ய, எனினும், இந்த முடிவுகள் getrusage இல் பெற்றோர் பணிகளில் உள்ளது போல உள்ளதா என ஆராய்ந்து செய்யப்படுகிறது. இந்த மேம்படுத்தல் rusadge_threadஐ சரியான மூல பயன்பாட்டிற்கு இந்த நிகழ்வுகளை கொடுக்க அனுமதிக்கிறது. (Bugzilla #451063)
  • இந்த தலைப்பு /usr/include/linux/futex.h முன்பு C மூலக்குறியீடு கோப்புகளில், ஒரு பிழையை அறிக்கையிடுகிறது. இந்த மேம்படுத்தல் ஒரு பின்னணினைப்பை சிக்கலான கர்னல் விளக்கங்கள் மற்றும் கைம்பைல் பிழைகளை சரி செய்கிறது. (Bugzilla #475790)
  • முந்தைய கர்னல்களில் கர்னல் பதிப்பு panic அல்லது oops வெளிப்பாடு செய்திகளில் அடையாளப்படுத்தப்படவில்லை. இந்த மேம்படுத்தல் கர்னல் பதிப்பு விவரங்களை oops மற்றும் panic வெளிப்பாட்டில் சேர்க்கிறது. (Bugzilla #484403)
  • வெளியீடு 2.6.18இன் போது, இந்த கர்னல் kernel-headers ஐ தொகுப்பு glibcக்கு கொடுக்க கட்டமைக்கப்பட்டது. அந்த செயல் பல்வேறு காப்புகளை சரியில்லாமல் குறியிடப்பட்டு சேர்க்கப்பட்டது. இந்த serial_reg.h கோப்பு தவறாக குறிக்கப்பட்டு kernel_headers rpm இல் சேர்க்கப்படவில்லை. இது வேறு rpmகளை உருவாக்கும் போது சிக்கலை உண்டு பண்ணுகிறது. இந்த மேம்படுத்தல் serial_reg.h கோப்பினை சேர்த்து இந்த சிக்கலை தீர்க்கிறது. (Bugzilla #463538)
  • சில சமயங்களில் upcrund, HP Unified Parallel C (UPC) தயாரிப்பில் செயல்முறை மேலாளர் ESRCH முடிவை கொடுத்து மற்றும் setpgid() ஐ ஒரு சேய் பணிக்கு அழைக்கும் போது தோல்வியுறுகிறது. இந்த மேம்படுத்தல் ஒரு பின்னிணைப்பு கொடுத்து சிக்கலை தீர்க்கிறது. (Bugzilla #472433)
  • sysrq-tக்கு ஒரு செயல்பாடு இயக்கும் பணிகளை பற்றிய தகவலை கொடுக்க சேர்க்கப்பட்டுள்ளது. இது செயலிழக்கப்பட்ட கணினிகளை பிழைத்திருத்தம் செய்ய உதவுகிறது. (Bugzilla #456588)

8.1.1. பிழைத்திருத்தல்

Red Hat Enterprise Linux 5.4இல், கர்னல் பிழைத்திருத்தம் கோர் டம்ப்களை உருவாக்குவது மூலம் மேம்படுத்தப்பட்டது. கோர் டம்ப்கள் (நினைவக ஸ்னப்ஷாட்கள்) கணினிகளை பிழைத்திருத்தம் செய்யவும் மற்றும் கர்னல் க்ராஷ்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மேம்படுத்தலில், ஒரு கோர் டம்ப் கணினிகளில் hugepageகளை கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது.(BZ#470411) கூடுதலாகர கர்னல் பீதி செய்திகள் ஒரு கோர் டம்ப் கோப்பிலிருந்து (vmcore) makedumpfile commandஐ பயன்படுத்தி இப்போது பிரித்தெடுக்கப்படுகிறது. (BZ#485308)

8.1.2. பாதுகாப்பு

  • இந்த மேம்படுத்தல் கர்னல் விசை புலத்தை 32 எழுத்து எண்ணிக்கை முன்பு கொண்டிருந்தது இப்போது 255 எழுத்துக்களுக்கு உயர்ந்தியுள்ளது. (Bugzilla #475145)
  • இந்த கர்னல் மேம்படுத்தல் பாதுகாப்பு நிலை ரூட் அல்லாத பயனர்களுக்கு சாதன முனைகளை கோப்பு முறைமைகளுக்கு NFSD (Network File System daemon)ஐ பயன்படுத்தி ஏற்ற அறிக்கையிடுகிறது. இந்த மேம்படுத்தல் CAP_MKNOD மற்றும் CAP_LINUX_IMMUTABLE) செயல்திறன்களை FSUID இல் 0வை கோப்பு முறைமை மாஸ்கில் கொடுக்கிறது. (Bugzilla #497272 மற்றும் Bugzilla #499076)
  • Federal Information Processing Standardization 140 (FIPS140) உடன் சான்றிதழ் தேவைகளை இந்த மேம்படுத்தல் கொண்டுள்ளது:
    • சுய பரிசோதனை; ansi_cprng (Bugzilla #497891), ctr(aes) முறைமை (Bugzilla #497888), Hmac-sha512 (Bugzilla #499463), rfc4309(ccm(aes)). (Bugzilla #472386), .
    • துவக்குதல் பணியின் போது GRUB checksumஐ கையொப்ப கோப்பில் குறியீட்டை கொடுக்கிறது. (Bugzilla #444632)
    • குறியீடு DSA விசையை 512 பிட்டிலிருந்து 1024 பிட்டுக்கு தொகுதி கையொப்பமிட மாற்றுகிறது. (Bugzilla #413241)

8.2. பொதுவான இயக்கத்தள சேவை

Throttling State (T-State) அறிவிப்பு சேவை கர்னலில் Advanced Configuration and Power Interface (ACPI) செயல்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளது. T-State அறிவிப்பை சேர்ப்பது Intel® Intelligent Power Node Manager தொழில்நுட்பத்தை டேட்டா மையங்களில் மின் மேலாண்மை யை பயன்படுத்த விரிவாக்கப்படுகிறது.(BZ#487567).

8.3. இயக்கி மேம்படுத்தல்கள்

8.3.1. Open Fabrics Enterprise Distribution (OFED) இயக்கிகள்

இந்த OpenFabrics Alliance Enterprise Distribution (OFED) என்பது Infiniband மற்றும் iWARP வன்பொருள் பரிசோதனை வசதிகளின் , Infiniband fabric மேலாண்மை டீமான், Infiniband/iWARP கர்னல் தொகுதி ஏற்றி, மற்றும் நூலகங்கள் மற்றும் பயன்பாடுகளை எழுதும் வளர்ச்சி தொகுப்பு Remote Direct Memory Access (RDMA) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux OFED மென்பொருள் ஸ்டேக்களை அதன் முழு ஸ்டேக்காக Infiniband/iWARP/RDMA வன்பொருள் சேவைக்கு பயன்படுத்துகிறது.
Red Hat Enterprise Linux 5.4இல், OFEDஇன் பின்வரும் பகுதிகள் அப்ஸ்டீரிம் பதிப்பு 1.4.1-rc3க்கு மேம்படுத்தப்பட்டது
கூடுதலாக, இந்த பின்வரும் OFED இயக்கிகள் அப்ஸ்டீரிம் பதிப்பு 1.4.1-rc3க்கு மேம்படுத்தப்பட்டது:
  • இந்த cxgb3 மற்றும் iw_cxgb3 இயக்கிகள் Chelsio T3 குடும்ப பிணைய சாதனங்களுக்கு(BZ#476301, BZ#504906)
  • mthca-அடிப்படையான InfiniBand HCA (Host Channel Adapter) இயக்கி (BZ#476301, BZ#506097)
  • qlgc_vnic driver (BZ#476301)

குறிப்பு

Red Hat மிகவும் நெருங்கி அப்ஸ்டீரிம் OFED குறியீடு அடிப்படையானவற்றை தேடி ஒரு அதிகபட்சி செயல்படுத்தல் நிலையை கொடுத்து தொழில்நுட்பத்தை மதிப்பிடுகிறது. ஒரு தொடராக , Red Hat API/ABI ஏற்றவற்றை மட்டும் பாதுகாத்து அப்ஸ்ட்ரீம் திட்டங்களில் நடப்பது போல சிறிய வெளியீடுகளில் மட்டும் செய்கிறது. இது ஒரு பொதுவான பயிற்சியிலிருந்து Red Hat Enterprise Linux உருவாக்கத்தில் விதிவிலக்காகும்.

8.3.2. பொதுவான இயக்கி மேம்படுத்தல்கள்

  • இந்த i5400 இயக்கி Intel 5400 class நினைவக கட்டுப்படுத்திகளுக்கு Error Detection And Correction (EDAC)இன் சேவையும் சேர்த்து மேம்படுத்தப்படுகிறது. (BZ#462895)
  • இந்த i2c இயக்கி iic-bus முகப்புக்கு மேம்படுத்தப்பட்டது, இந்த AMD SB800 Family தயாரிப்புகளுக்கு துணைபுரிதலை சேர்க்கிறது.
  • இந்த i2c-piix4 இயக்கி Broadcom HT1100 chipsetக்கு துணைபுரிய மேம்படுத்தப்பட்டுள்ளது. (BZ#474240)
  • இந்த hpilo இயக்க மேம்படுத்தப்பட்டது.(BZ#488964).
  • இந்த dm9601 Davicom ஈத்தர்நெட் அடாப்டர்கள் மேம்படுத்தப்பட்டன.

8.3.3. பிணைய இயக்கி மேம்படுத்தல்கள்

  • இந்த பிணைக்கும் இயக்கி சமீபத்திய அப்ஸ்டீரிம் பதிப்பில் மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தலில், symbol/ipv6 தொகுதி சார்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, IPv6 முன்பு செயல்நீக்கப்பட்டிருந்தால் (இந்த install ipv6 /bin/false வரியை /etc/modprobe.conf கோப்பில் சேர்த்திருந்தால்) ஒரு மேம்படுத்தல் பிணைத்தல் இயக்கியை 5.4இல் ஏற்ற முடியாமல் போகலாம். இந்த install ipv6 /bin/false வரி install ipv6 "disable=1 மாற்றப்பட்டு சரியாக தொகுதியை ஏற்ற வேண்டும்.
  • Intel® I/O Acceleration Technology (Intel® I/OAT)க்கு கர்னல் இயக்கிகள் பதிப்பு 2.6.24க்கு மேம்படுத்தப்பட்டது.(BZ#436048).
  • இந்த igb இயக்கி Intel® Gigabit ஈத்தர்நெட் அடாப்டர்களுக்கு பதிப்பு 1.3.16-k2க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் GRO துணைபுரிதலை igb இயக்கிக்கு செயல்படுத்துகிறது. (BZ#484102, BZ#474881, BZ#499347).
  • இந்த igbvf இயக்கி மேம்படுத்தப்பட்டது, Intel 82576 Gigabit ஈத்தர்நெட் கட்டுப்படுத்திகளுக்கு மெய்நிகர் செயல்பாட்டு துணைபுரிதலை கொடுக்கிறது. (BZ#480524)
  • இந்த ixgbe இயக்கிIntel 10 Gigabit PBetaCI Express பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 2.0.8-k2க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் GRO துணைபுரிதலை ixgbe இயக்கிக்கு செயல்படுத்துகிறது. (BZ#472547, BZ#499347).
  • இந்த bnx2 இயக்கி Broadcom NetXtreme II பிணைய சாதனங்களுக்கு பதிப்பு1.9.3க்கு மேம்படுத்தப்பட்டது (BZ#475567 BZ#476897 BZ#489519)
  • இந்த tg3 இயக்கி Broadcom Tigon3 ஈத்தர்நெட் சாதனங்களுக்கு பதிப்பு 3.96க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#481715, BZ#469772). இந்த இயக்கி மேம்படுத்தல் T5785F மற்றும் 50610M சாதனங்களுக்கு துணைபுரிகிறது. (BZ#506205)
  • இந்த cnic இயக்கி சேர்க்கப்பட்டது,Internet Small Computer System Interface (iSCSI) துணைபுரிதலை bnx2 பிணைய சாதனங்களுக்கு கொடுக்கிறது. (BZ#441979).
  • இந்த bnx2x இயக்கி Broadcom Everest பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 1.48.105க்கு மேம்படுத்தப்பட்டது.(BZ#475481).
  • இந்த bnx2i இயக்கி சேர்க்கப்பட்டது, iSCSI துணைபுரிதலை bnx2x பிணைய சாதனங்களுக்கு வழங்குகிறது. (BZ#441979).
  • இந்த cxgb3 இயக்கி Chelsio T3 Family பிணைய சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, iSCSI TCP Offload Engines (TOE) மற்றும் Generic Receive Offload (GRO) துணைபுரிதலை செயல்படுத்துகிறது. (BZ#439518, BZ#499347)
  • இந்த forcedeth ஈத்தர்நெட் இயக்கி NVIDIA nForce சாதனங்களுக்கு பதிப்பு 0.62இல் மேம்படுத்தப்பட்டது. (BZ#479740).
  • இந்த sky2 இயக்கி Marvell Yukon 2 chipset ஐ பயன்படுத்தி ஈத்தர்நெட் கட்டுப்படுத்திகளுக்கு மேம்படுத்துகிறது. (BZ#484712).
  • இந்த enic இயக்கி Cisco 10G ஈத்தர்நெட் சாதனங்களுக்கு பதிப்பு 1.0.0.933க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#484824)
  • இந்த e1000e இயக்கி Intel PRO/1000 ஈத்தர்நெட் சாதனங்கள் அப்ஸ்டீரிம் பதிப்பு 1.0.2-k2க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#480241)
  • இந்த be2net இயக்கி Emulex Tiger Shark converged பிணைய அடாப்டருக்கு ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது.

8.3.4. சேமிப்பக இயக்கி மேம்படுத்தல்கள்

  • இந்த bnx2 இயக்கி இப்போது iSCSIக்கு துணைபுரிகிறது. இந்த bnx2i இயக்கி இந்த bnx2 இயக்கியை cnic தொகுதி வழியாக அணுகி iSCSI ஆஃப்லோடு சேவையை வழங்குகிறது. bnx2iஐ மேலாண்மை செய்ய, iscsi-initiator-utils தொகுப்பை பயன்படுத்தவும். bnx2i கட்டமைப்பு பற்றிய விவரங்களுக்கு, /usr/share/docs/iscsi-initiator-utils-<version>/README கோப்பில் பிரிவு 5.1.2இல் பார்க்கவும். (BZ#441979 மற்றும் BZ#441979)
    bnx2i பதிப்பு இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது IPv6க்கு துணைபுரியாது.
  • இந்த md இநக்கி மேம்படுத்தப்பட்டு பிட்மேப் இணைத்தலுக்கு துணைபுரிய மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி முழு மறு ஒத்திசைவு தேவையை நீக்குகிறது. (BZ#481226)
  • இந்த scsi அடுக்கு இந்த வெளியீட்டில் பின்வரும் மேம்படுத்தல்களை கொண்டுள்ளது:
    • இந்த scsi இயக்கி இப்போது அப்ஸ்டீரிம் scsi_dh_alua தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இது asymmetric logical unit access (ALUA) துணையை இந்த வெளியீட்டுடன் சேர்க்கிறது. scsi_dh_alua தொகுதியை dm-multipath பயன்படுத்தும் போது, aluahardware_handler வகையாக multipah.confஇல் குறிப்பிடவும். (BZ#482737)
      EMC Clariion சாதனங்களுக்கு, scsi_dh_alua அல்லது dm-emc மட்டும் துணைபுரிகிறது. scsi_dh_alua மற்றும் dm-emc ஐ பயன்படுத்துவது துணைபுரியாது.
    • இந்த rdac_dev_list வடிவம் இப்போது md3000 மற்றும் md3000i உள்ளீடுகளை சேர்க்கிறது. இது பயனர்களை iscsi_dh_rdac தொகுதியை வழங்கு பயன்படுகிறது. (BZ#487293)
    • iSCSI iBFT நிறுவலகளின் போது வட்டு வடிவமைப்பில் பீதி கிளப்பியது இப்போது சரி செய்யப்பட்டது. (BZ#436791)
    • ஒரு பிழை iscsi_r2t_rsp struct இல் iSCSI failoverகளில் கர்னல் பீதியை உருவாக்கிய சில பல்பாதை சூழலில் இப்போது சரி செய்யப்பட்டது. (BZ#484455)
  • இந்த cxgb3 இயக்கி பல்வேறு அப்ஸ்டீரிம் திருத்தங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டது மற்றும் இது iSCSI TOE சாதனங்களுக்கு துணைபுரிகிறது. (BZ#439518)
    இந்த cxgb3i பதிப்பு இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டு IPv6க்கு துணைபுரியாது.
  • இந்த வெளியீட்டில் புதிய mpt2sas இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இயக்கி SAS-2 family அடாப்டர்களை LSI Logicஇலிருந்து துணைபுரிகிறது. SAS-2 3Gb/s லிருந்து 6Gb/s வரை தரவு பரிமாற்றங்களை அதிகரிக்கிறது.
    இந்த mpt2sas இயக்கி drivers/scsi/mpt2sas அடைவில் உள்ளது, சொல்லியபடி பழைய mpt இயக்கிகள் drivers/message/fusion அடைவில் உள்ளது. (BZ#475665)
  • இந்த aacraid இயக்கி இப்போது பதிப்பு 1.1.5-2461க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல்வேறு அப்ஸ்டீரிம் சிக்கல்கள், ஸ்கேன் வரிசைப்படுத்தல், கட்டுப்படுத்தி பூட் சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களையும் சரி செய்கிறது. (BZ#475559)
  • இந்த aic7xxx இயக்கி இக்கோது அதிகபட்ச I/O அளவை அதிகரித்து செயல்படுகிறது. இது துணைபுரியும் சாதனங்களுக்கு (SCSI டேட் சாதனங்களுக்கு) பெரிய இடையகங்களுக்கு எழுத அனுமதிக்கிறது.
  • இந்த cciss இயக்கி அப்ஸ்டீரிம் சிக்கல்களை நினைவக BAR கண்டுபிடிப்புகளை பாதிக்கும் சிக்கல்களை தீர்க்கிறது rebuild_lun_table மற்றும் MSA2012 ஸ்கேன் த்ரட்டை சரி செய்கிறது. இந்த மேம்படுத்தல் cciss இல் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களை செயல்படுத்தவும்.
  • இந்த fnic இயக்கி பதிப்பு 1.0.0.1039க்கு மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு அப்ஸ்டீரிம் பிழைத்திருத்தங்களை செயல்படுத்துகிறது, libfc மற்றும் fcoe தொகுதிகளை மேம்படுத்துகிறது மற்றும் ஒரு புதிய தொகுதி அளவுருவை பிழைத்திருத்து பதிவில் சேர்க்கிறது. (BZ#484438)
  • இந்த ipr இயக்கி இப்போது MSI-X தடங்கல்களுக்கு துணைபுரிகிறது. (BZ#475717)
  • இந்த lpfc இயக்கி பதிப்பு 8.2.0.48க்கு மேம்படுத்தப்பட்டது. இது வன்பொருள் துணையை இனிவரும் OEM நிரல்களுக்கு செயல்படுத்துகிறது. கூடுதலாக, இந்த மேம்படுத்தல் பின்வரும் பிழைத்திருத்தங்கள் (மற்றவற்றையும் சேர்த்து) செயல்படுத்துகிறது:(BZ#476738 and BZ#509010)
    • மெய்நிகராக்கப்பட்டட fibre-channel மாற்றிகள் இப்போது துணைபுரிகிறது.
    • பிழைக்கு விழிப்பு தடங்கல்களுக்கான போலிங் இப்போது உள்ளது.
    • ஒரு பிழை vport create மற்றும்delete loop இல் உள்ள நினைவக கசிவு இப்போது சரி செய்யப்பட்டது.
    இந்த மேம்படுத்தலில், இந்த lpfc இயக்கி இப்போது HBAnyware 4.1 மற்றும் OneConnect UCNAக்கு துணைபுரிகிறது. (BZ#498524)
  • இந்த MPT fusion இயக்கி இப்போது பதிப்பு 3.04.07rh v2க்கு மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு பிழைத்திருத்தங்களை செயல்படுத்துகிறது: (BZ#475455)
    • ஒரு MPT fusion இயக்கி பிழை PAE கர்னலுடன் துவங்குவதை தடுப்பது இப்போது சரி செய்யப்பட்டது.
    • கட்டுப்படுத்திகள் இப்போது இயக்கி இறக்கப்பட்டதும் READY_STATE க்கு அமைக்கப்பட்டது.
    • இந்த mptsas இயக்கி இப்போது TUR (Test Unit Ready) மற்றும் Report LUN கட்டளைகளை ஒரு சாதனத்தை சேர்க்கும் போது போக்குவரத்து அடுக்கிற்கு சேர்க்கிறது.
    கூடுதலாக, ஒரு பின்னிணைப்பு எதிர்பாராமல் mptctl_ioctl() பல் கர்னல் பிழை செய்திகளை கொடுத்தது இப்போது திரும்பப்பெறப்பட்டது. இந்த வெளியீட்டில், mptctl_ioctl() இந்த கர்னல் பிழை செய்திகளை கொடுப்பதில்லை.
  • இந்த megaraid_sas இயக்கி இப்போது பதிப்பு 4.08-RH1க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பின்வரும் அப்ஸ்டீரிம் விரிவாக்கங்கள் மற்றும் பிழைத்திருத்தங்களை (பிறவற்றையும் சேர்த்து) கொண்டுள்ளது:(BZ#475574)
    • இந்த மேம்படுத்தல் ஒரு போலிங் முறைமையை இயக்கிக்கு சேர்க்கிறது
    • ஒரு பிழை டேப் இயக்கிகள் துணைபுரிதலை பாதித்தது சரி செய்யப்பட்டது. இந்த வெளியீட்டில் இந்த pthru நேர முடிதல் மதிப்பு இப்போது O/S அடுக்கு நேரமுடிதல் மதிப்புடன் அமைக்கப்பட்டு டேப் இயக்கிகளுக்கு அனுப்பப்படுகிறது.
  • இந்த mvsas இயக்கி இப்போது பதிப்பு 0.5.4க்கு மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு பிழைத்திருத்தங்கள் மற்றும் விரிவாக்கங்களை கொண்டுள்ளது மற்றும் Marvell RAID bus controllers MV64460, MV64461, மற்றும் MV64462 க்கு துணைபுரிகிறது. (BZ#485126)
  • இந்த qla2xxx இயக்கி பதிப்பு8.03.00.10.05.04-kக்கு மேம்படுத்தப்பட்டது, மற்றும் இப்போது Fibre Channel over Convergence Enhanced Ethernet அடாப்டருக்கு துணைபுரிகிறது. இந்த வெளியீட்டில், qla2xxx அப்ஸ்ட்ரீமிலிருந்து பல்வேறு பிழைகளை சரி செய்கிறது, : (BZ#471900, BZ#480204, BZ#495092, மற்றும் BZ#495094)
    • OVERRUN இன் போது 4GB மற்றும் 8GB அடாப்டர்களை கையாளும் போது நீக்குதல் கண்டறியப்பட்டது இப்போது சரிசெய்யப்பட்டது.
    • அனைத்து vports எந்த ஒத்திசைவில்லாத நிகழ்வுகளுக்கும் இப்போது விழிப்பூட்டப்பட்டுள்ளது.
    • QLogic 2472 கார்டுடன் கர்னல் பீதிகளை உருவாக்கும் ஒரு பிழை சரி செய்யப்பட்டது.
    • இந்த stop_firmware கட்டளை நேரமுடிதலிலிருந்து விடுவிக்கப்பட்டது.
    • இந்த செக்டார் மாஸ்க் மதிப்பு நிலையான optrom அளவை கொண்டு இருப்பதில்லை.
    • ஒரு பிழை தொடர்ந்து பாதை தோல்வியை I/O இல் பல் பாதை சாதனங்கள் கொண்டிருக்கும் போது வந்தது சரி செய்யப்பட்டது. (BZ#244967)
    • இயக்கி மூல குறியீடு இப்போது kABI-compliant.
    • dcbx சுட்டிகள் இப்போது NULL க்கு நினைவகத்தை வெறுமையாக்கிய பின் அமைக்கப்பட்டது.
    இந்த மேம்படுத்தல்களின் கூடுதலாக, இந்த qla24xx மற்றும் qla25xx firmwareகள் qla2xxx இயக்கியில் இப்போது பதிப்பு 4.04.09க்கு மேம்படுத்தப்பட்டது.
  • இந்த qla4xxx இயக்கி இப்போது மேம்பட்ட இயக்கி தவறு மீட்பை கொண்டுள்ளது. இந்த மேம்படுத்தல் அடாப்டர் மீட்பை தடுத்து புரவலன் அடாப்டரில் வெளிவரும் கட்டளைகள் இருந்தால் பிழையைத் திருத்துகிறது. (BZ#497478)
  • இந்த வெளியீடு புதிய qlge இயக்கியை சேர்க்கிறது. இந்த இயக்கி QLogic FCoE 10GB அடாப்டர்களுக்கு துணை சேர்க்கிறது. (BZ#479288)

9. தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகள் இப்போது Red Hat Enterprise Linux சந்தா சேவைகளின் கீழ் துணைபுரியவில்லை, முழுவதும் செயல்படாமல் இருக்கலாம் மற்றும் உற்பத்திக்கு உகந்ததாக இருக்கலாம். எனினும், இந்த வசதிகள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பின்வரும் தொழில்நுட்ப முன்பார்வைகள் புதியவை அல்லது Red Hat Enterprise Linux 5.4 பீட்டாவில் விரிவாக்கப்பட்டது. தொழில்நுட்ப முன்பார்வையில் Red Hat Enterprise Linux 5.4 பற்றி விரிவான தகவலுக்கு, 5.4 இன் தொழில்நுட்பக முன்பார்வைகள் பிரிவை http://www.redhat.com/docs/manuals/enterprise/ இல் பார்க்கவும்

A. வரலாறு மறுபார்வை

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 0.4Thu Jul 23 2009Don Domingo
SME தொழில்நுட்ப மறுபார்வைக்கு சேமிப்பக இயக்கி மேம்படுத்தல்கள் பிரிவை செயல்படுத்துகிறது
மீள்பார்வை 0.3Thu Jul 02 2009Ryan Lerch
பல்வேறு பிழைகளை சரி செய்தது, பீட்டா குறிப்பிட்ட தெரிந்த சிக்கல்களை சேர்த்தது.
மீள்பார்வை 0.2Wed Jul 01 2009Ryan Lerch
பீட்டா வெளியீட்டு அறிக்கை.
மீள்பார்வை 0.1Tue Apr 21 2009Ryan Lerch
5.3 வெளியீட்டு அறிக்கையிலிருந்து தொடர்பான உள்ளடக்கம் நகர்த்தப்பட்டது.